விஜயின் கட்சிக்கு முதன்முதலாக ஆதரவு – தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஒப்புதல்!

tubetamil
0

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. அவர் கட்சி தொடங்கியதிலிருந்து முதன்முறையாக, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தனது ஆதரவையும் கூட்டணிக்கும் உறுதிபடுத்தியுள்ளது.



தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய், அரசியலில் இறங்கி தனது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு அமைப்புகளை கட்டமைத்து வருகிறார். இதற்கிடையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, விஜயின் தலைமையில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாகச் செயல்படுவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.



இதற்கு முன்னதாக, விஜய், தங்கள் கட்சியுடன் இணைய விரும்பும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். இந்த உத்தரவாதம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவிற்கு முக்கிய காரணமாகும் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.


இந்நிலையில், மாவட்டத் தலைவர்களின் நியமனம் மற்றும் கட்சியின் அணி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் விஜயின் கட்சியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் அரசியலில் விஜயின் கட்சி உறுதியாக பாதை வகுக்க தொடங்கியுள்ளதை, இந்த ஆதரவு முடிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top