கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக 70 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற விசாரணையின் பின்னர், நீதிபதி மஞ்சுள திலகரத்ன குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் கையளிக்கப்படுவதற்குப் பிறகு, நாமல் ராஜபக்சவை பிணையில் செல்ல அனுமதிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது