புதுக்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை அதிர்ச்சியூட்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில், பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவா, சம்பவ இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் தகவலின் படி, சஞ்சீவா இன்று பூசா சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக அழைத்துவரப்பட்ட போது, துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸ், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சட்டத்தரணி போலவே வேடமணிந்து இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் அறியப்படாத காரணத்தினால் எனவே பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.