பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் (C.I.D) வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (26.02.2025) குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான விசாரணைக்கு உட்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகிய தகவல்களின் படி, இந்த விசாரணை நாமல் ராஜபக்சவின் கைது செய்யப்படுவதற்கான முன்னோட்டமாக இருக்கக்கூடும் என்ற செய்திகள் பரவி வருகின்றன.
நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் துறையின் அழைப்பு, இலங்கை அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை எப்படி முன்னேறும், இது எந்த முடிவுக்கு செல்லும் என்பதை கவனிக்க வேண்டும். மேலும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.