நடிகர் விஜய், அரசியல் பயணத்திற்காக சினிமாவை விட்டு விலகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில், 'டிராகன்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, விஜய் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் அவருடன் பணியாற்ற தான் தயாராக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் இப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, தான் ஒரு தீவிர விஜய் ரசிகன் என்று குறிப்பிட்டார்.
"விஜய் சார் மாதிரி நடனம் யாராலும் ஆட முடியாது. அவருடன் ஒரு படமாவது பண்ண வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தால், அவருக்காக நான் காத்திருப்பேன். அவருடன் இணைந்து ஒரு படம் இயக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று அஸ்வத் மாரிமுத்து உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்.
மேலும், விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்றும், அந்த படத்தை ரீமேக் செய்தால் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய், அரசியல் பயணத்திற்காக சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும், அவர் மீண்டும் திரையுலகிற்கு திரும்ப வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அஸ்வத் மாரிமுத்துவின் இந்த கருத்து, விஜய் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
2008ஆம் ஆண்டு ரசிகர்களுடன் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்தார். 2009ஆம் ஆண்டில் விஜய் மக்கள் இயக்கம் உருவானது. அதேநேரத்தில் புதுவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவர் சொன்னபடியே கடந்தாண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.