தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு சகோதரர்கள், கைத்தொலைபேசியினை பயன்படுத்துவது பற்றிய சர்ச்சையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கையுடன் இணைந்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில், கைத்தொலைபேசியினை அதிக நேரம் பயன்படுத்தியதை கண்டித்து தங்கை வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமையன், அவளிடம் இருந்த கைதொலைபேசியை பறித்துள்ளார். இது வழிமறித்த அண்ணனின் செயலுக்கு எதிராக தங்கை வீடு அருகிலுள்ள கிணற்றில் தற்கொலை செய்ய முனைந்துள்ளார். தங்கையை கிணற்றில் விழுந்ததை கண்ட அண்ணன், அவளைக் காப்பாற்ற சென்ற போது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.