380 கோடி ஜீவனாம்சம்! இந்திய சினிமாவின் அதிர்ச்சி விவாகரத்து! யார் அந்த நடிகர்?

tubetamil
0

 இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நடிகர் தனது மனைவிக்கு 380 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுத்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?



அந்த அதிர்ச்சி விவாகரத்து வேறு யாருடையதுமல்ல, பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடையதுதான். ஹ்ரித்திக் ரோஷனும் அவரது மனைவி சூசேன் கானும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 11 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். விவாகரத்தின்போது, சூசேன் கான் 400 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டதாகவும், ஆனால் ஹ்ரித்திக் ரோஷன் 380 கோடி ரூபாய் கொடுக்க சம்மதித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய ஜீவனாம்சத் தொகையாகும்.



இந்த விவாகரத்து பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சூசேன் கான் இருவரும் பிரிந்தாலும், நண்பர்களாக இருந்து வருகின்றனர்.



இதேவேளை   ஹ்ரித்திக் ரோஷன் தற்போது நடிகை சபா ஆசாத்துடன் காதலில் இருக்கின்ற நிலையில்  சூசேன் கான் அர்ஸ்லான் கோனியுடன் காதலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top