மனோஜ் பாரதிராஜா மரணம் - திரையுலகினர் உருக்கமான அஞ்சலி..!

tubetamil
0

 தமிழ் திரைப்பட உலகை சோகத்தில் ஆழ்த்தும் செய்தி—நாம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகர், இயக்குநர் மனோஜ் பாரதிராஜா (வயது 48) நேற்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பேரதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது.


1976 செப்டம்பர் 11ஆம் தேதி, இயக்குநர் பாரதிராஜா - சந்திரலீலா தம்பதியினருக்கு மகனாக பிறந்த மனோஜ், 1999ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்மை, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், கடைசியாக மார்கழி திங்கள் படத்தை இயக்கினார்.


மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினருக்கு பேரிழப்பாகியுள்ளது. இளையராஜா தனது இரங்கலை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார். கமல் ஹாசன், வெங்கட் பிரபு ஆகியோர் எக்ஸ் தளத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளனர். சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


மேலும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். திரைத்துறையின் முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top