பாப்பரசரின் உடல்நிலை சீராக உள்ளதாக திருப்பீடத்தகவல் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்தத்துறை மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) காலை மருத்துவமனையில் தன்னைக் கவனித்துக்கொள்பவர்களுடன் திருப்பலியில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்திலும் ஓய்வெடுத்தலிலும் இந்நாளை செலவழித்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளது .
இதேவேளை கடந்த திங்கட்கிழமை (03) வெளியான தகவலின் அடிப்படையில், இரவு முழுவதும் நன்றாக உறங்கி ஓய்வெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு திருத்தந்தையின் உடல்நிலை மருத்துவக் கண்காணிப்புகளுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெருவிக்கப்பட்டுள்ளது