இணையத்தில் கடந்த சில தினங்களாக ஜிப்லி ஸ்டைல் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ChatGPT-யில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம், பயனர்களின் புகைப்படங்களை ஜப்பானிய அனிமேஷன் ஸ்டூடியோவான ஜிப்லியின் பாணியில் மாற்றித் தருகிறது.
இதனால் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லி ஸ்டைலில் மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த அம்சத்திற்கு பயனர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால், ஒரே நேரத்தில் பலரும் பயன்படுத்தும் போது OpenAI-யின் சர்வர்கள் அதிக சுமையை எதிர்கொள்கின்றன.
இதனால் AI சேவைகள் தடைபடும் அபாயம் உள்ளது. இதைச் சமாளிக்க, சில ஜிப்லி ஸ்டைல் புகைப்படங்களை உருவாக்கும் வேகத்தை OpenAI நிறுவனம் குறைத்துள்ளது. OpenAI-யின் AI கருவிகள் 24 மணி நேரமும் செயல்படுவதால், ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியுள்ளது
. இதனால் அவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். "எங்கள் பணியாளர்களுக்கும் தூக்கம் தேவை" என்று OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஸ்டைல் புகைப்படங்களை உருவாக்கும் வேகத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை OpenAI எடுத்து வருகிறது.
ஜிப்லி ஸ்டூடியோ ஜப்பானின் புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம். இவர்களின் அனிமேஷன் படங்கள் உலகளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது