கடந்த 10ம் தேதி வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது குட் பேட் அக்லி திரைப்படம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும் சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூல் பட்டையை கிளப்பி வருகிறது.