திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது!

Author
0

 இந்தியாவில் கர்நாடக மாநிலம் வேனூர் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிய 22 வயதான  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


சில மாதங்களுக்கு முன்பு, குறித்த தனது பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் நட்பாக பழகியதாகவும், பின்னர் அவளை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு உருவாக்க முயன்றதாகவும் தெரிகிறது.

அதன்பின், சிறுமியை வீடு அழைத்துச் சென்று பலமுறை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் உடல் நலக்குறைவால் துன்புறுத்தப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெற்றோருக்கு, பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, திருமணம் செய்வதாக கூறி குறித்த இளைஞன் தன்னை ஏமாற்றியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் வேனூர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளித்தனர்.  தொடர்ந்து, பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குறித்த இளைஞனை கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.






கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top