நகர்ந்து செல்லும் டித்வா புயல் ; இன்றும் மழைக்கு வாய்ப்பு!

Author
0

 "டித்வா" ( Ditwah ) சூறாவளியானது நலிவடைந்து ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு - வடகிழக்குத் திசையில் சுமார் 300 km தொலைவில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இது மேலும் நலிவடைந்து வட திசையை நோக்கி நாட்டை விட்டு அப்பால் நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இடைக்கிடையே மழை

வடக்கு, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.


 இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top