இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 3,600-க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 3,642 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
405 உயிரிழப்பு நேரிட்ட விபத்துக்கள் பதிவான நிலையில் அவற்றில் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 866 பாரதூரமான விபத்துக்கள் பதிவான நிலையில் அவற்றில் 1,730 பேர் காயமடைந்துள்ளனர்.இது தவிர 641 விபத்துக்களில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இரண்டு மாதங்களில் 3,600க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் !!!
மார்ச் 09, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
