ஈரான் போரை விரும்பவில்லை": உலக மக்களின் துயரத்தைக் கண்டு வருந்துகிறோம் - அமெரிக்காவின் அத்துமீறலைத் தடுக்க உலகத் தலைவர்களுக்கு ஈரான் உருக்கமான வேண்டுகோள்!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் ஒருபோதும் போரை விரும்பியதில்லை என ஈரானின் உச்ச தலைவரின் பிரதிநிதி அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார். தற்போதைய போர்ச் சூழலால் உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஈரான் கவலை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்களின் துயரம் குறித்து வருத்தம்
"பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டினால் உலக மக்கள் சந்திக்கும் சிரமங்களை நாங்கள் நன்கு உணர்கிறோம். மக்களின் இந்தத் துயரத்தைக் கண்டு நாங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால், எம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகத் தலைவர்களுக்கு அழைப்பு
அமெரிக்காவின் தன்னிச்சையான போர் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கு உரிய இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து, இந்தப் பேரழிவுப் போரை நிறுத்த உலக சமூகம் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
#Tubetamil24X7 #Tubetamil #IranWar2026 #PeaceTalks #DonaldTrump #FuelCrisis #BreakingNewsTamil #Jaffna #WorldWar3 #OperationEpicFury #TamilNewsToday
