உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் முக்கியப் பங்காற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்க முயல்வதற்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்துத் தனது 'Truth Social' பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் கடற்கரையோரப் பகுதிகளில் அமெரிக்க வான்படை மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை (Bombing the hell out of the shoreline) முன்னெடுக்கும் என உறுதியளித்துள்ளார்.சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதால் நேரடியாகப் பாதிக்கப்படும் சீனா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து தங்களது போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்ப வேண்டும் என ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். "இந்தச் செயற்கையான தடையை உடைக்க ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அச்சுறுத்தலும் ட்ரம்பின் பதிலடியும்
ஈரானின் பிரதான இராணுவக் கட்டமைப்புகள் ஏற்கனவே சிதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், எனினும் குறுகிய ஜலசந்திப் பகுதியில் ஈரான் ட்ரோன்கள் அல்லது கண்ணிவெடிகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்க வாய்ப்புள்ளதை ஒப்புக்கொண்டார். "எந்த வழியிலாவது (One way or another) ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தே தீருவேன்" என அவர் தனது பதிவில் ஆணித்தரமாகச் சபதம் செய்துள்ளார்.
