நீதிக்கு புறம்பான முறையில் வைத்தியர்களின் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (31) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் தெரிவித்தார்.
வேலைநிறுத்தம்
இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மகரகம அபெக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக அலகுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைநிறுத்தம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாவிடில், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் பிரபாத் சுகந்ததாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
