துபாயில் முன்னெடுக்கப்பட்டு வரும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக 2,000 இலங்கைத் தொழிலாளர்களை பணியமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக, திட்டத்தை முன்னெடுத்து வரும் சீனாவின் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம், துபாயிலுள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

திறமையான மற்றும் ஓரளவு திறமையான இலங்கைத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துபாயின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் இலங்கையர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

எதிர்காலத்தில் உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இந்த விமான நிலையம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.