கொழும்பில் நபர் ஒருவரை கடத்தி 2 கிலோகிராம் தங்கம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Author
0

கொழும்பில் நபர் ஒருவரை கடத்தி 2 கிலோகிராம் தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள உபபொலிஸ் பரிசோதகர் (சப்இன்ஸ்பெக்டர்) ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.களனியில் பொலிஸ் பயிற்சி பாடநெறியில் கற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் 21 ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் 

கடந்த 2023 ம் மாச் 18 ஆம் திகதி கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப்பிரிவில் கடமையாற்றும் போது ஒருவரை கடத்தி 2 கிலோ கிராம் தங்கம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மட்டு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து அங்கு கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நெறிக்கு கற்பதற்காக சென்றுள்ள நிலையில், இந்த ஆள் கடத்தல் கொள்ளை தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த சிஜடியினர் அவரை பயிற்சியில் இருக்கும்போது புதன்கிழமை (20) கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை 21 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top