தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசு, திருமணம் செய்யும் ஏழை மகளிருக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றிருந்த இந்தத் திட்டம், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு வழங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, நடைமுறை அமலாக்கத்தில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் மக்களுக்கு எவ்வளவு பயனளிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
