சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! – இலங்கையில் இன்று முதல் இலவச வீசா நடைமுறை!

Author
0
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இன்று முதல் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா வீசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
📌 முக்கிய தகவல்கள்:
▪️ இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய இலவச சுற்றுலா வீசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
▪️ தகுதியுடைய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 30 நாட்கள் வரை இலங்கையில் தங்குவதற்கான இலவச ETA அனுமதியைப் பெறலாம்.
▪️ இந்த காலப்பகுதிக்குள் இரண்டு முறை (Double Entry) இலங்கைக்குள் நுழைந்து செல்ல அனுமதி வழங்கப்படும்.
▪️ 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்புவோர் கட்டண அடிப்படையில் வீசாவை நீட்டித்துக் கொள்ளலாம்.
▪️ இலங்கை வருவதற்கு முன்பாகவே மின்னணு பயண அனுமதி (ETA) பெறுவது கட்டாயமாகும்.
▪️ இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட மொத்தம் 40 நாடுகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
▪️ மாலைத்தீவு, சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர் பிரஜைகளுக்கான கட்டணமில்லா ETA நடைமுறை வழக்கம்போல தொடரும்.
🌍 இந்த நடவடிக்கை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top