யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

Author
0

 யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.


சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்திலுள்ள கடை ஒன்றுக்குச் சென்று 'ஐஸ் பக்கெட்டுகளை' விற்பனை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top