இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் (USD) கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன.
டொலரின் கொள்வனவு விலை: 324.4550 ரூபாய் டொலரின் விற்பனை விலை: 334.2444 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (27) டொலரின் விற்பனை விலை ரூபா 330.81 ஆகக் காணப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இன்று டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
