இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் இன்று புனித ஹஜ் பெருநாளை ஆன்மீக பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹஜ் யாத்திரைக்காக, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 18 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா நகரில் திரண்டுள்ளனர்.
இந்த ஆண்டில் கடந்த ஆண்டை விட அதிகமான வெளிநாட்டு யாத்திரீகர்கள் பங்கேற்றுள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மினா, அரஃபாத் மற்றும் ஜம்ராத் பகுதிகளில் மெட்ரோ மற்றும் போக்குவரத்து வசதிகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், கடும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு குடிநீர், மருத்துவ முகாம்கள் மற்றும் அவசர சிகிச்சை வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வான அரஃபாத் மலைப்பகுதியில் இலட்சக்கணக்கானோர் தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்
