கனடா செல்லும் தமிழர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

Author
0
கனடாவில் தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகள் மாற்றப்பட்டு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளின் சூட்கேஸில் உள்ள Tag ரகசியமாக அகற்றப்பட்டு, அதனை போதைப்பொருள் நிரப்பப்பட்ட வேறு பொதியில் ஒட்டுவதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து அறியாத 17 பயணிகள் பல்வேறு நாடுகளில் சட்ட சிக்கல்களில் மாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 குறிப்பாக ரொரன்ரோ விமான நிலையம் வழியாக பயணிக்கும் தமிழர்கள்:
✔️ தங்கள் பொதிகளை எப்போதும் கண்காணிக்கவும்
✔️ Boarding Tag மற்றும் Bag Tag சரிபார்க்கவும்
✔️ யாருடைய பொதியையும் ஏற்க வேண்டாம்
✔️ Check-in பிறகு பொதியின் புகைப்படம் எடுத்து வைத்திருக்கவும்
அலட்சியம் ஒரு பெரிய சட்ட சிக்கலாக மாறலாம்..! ⚠️

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top