தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெல்லமண்டி நடராஜன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்று சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த அவர், தற்போது விஜய்யின் தவெகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கடும் தோல்வி கண்ட பிறகு, அக்கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே எஸ்பி வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் விஜய் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெல்லமண்டி நடராஜனின் இணைவு எடப்பாடி தரப்புக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் தவெக வேகமாக வளர்கிறதா? 

