மே 11: "பாகிஸ்தான் தூது தோல்வி?"
"போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்திற்குப் பெரும் பின்னடைவு! - கடும் கோபத்தில் அமெரிக்க அதிபர்!"
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்துள்ள அதிகாரப்பூர்வ பதில் குறித்து அதிபர் டிரம்ப் தனது முதல் நேரடியான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
"ஈரானின் 'பிரதிநிதிகள்' என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வந்த பதிலை நான் இப்போதுதான் படித்தேன். எனக்கு அது பிடிக்கவில்லை, முற்றிலும் ஏற்க முடியாது! இந்த விவகாரத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி," என அவர் மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் "அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்" என்ற தனது பெயரிட்டே இந்த அதிரடியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுடனான இந்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் மூலமாகவே தங்களின் அதிகாரப்பூர்வ பதில் இன்று அமெரிக்காவிடம் வழங்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
"அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஈரானின் நிபந்தனைகளை டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்திருப்பது பேச்சுவார்த்தையில் மாபெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது. போர்நிறுத்தம் தோல்வியடைந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்குமா என்ற அச்சம் வளைகுடாப் பகுதியில் எழுந்துள்ளது!"
