ஜப்பானில் தடுப்புக்காவலில் இருந்த இலங்கை மாணவன் மர்ம மரணம் – சகோதரியின் முறைப்பாடும் நிராகரிப்பு!

Author
0
ஜப்பானின் Ibaraki மாகாணத்தில் உள்ள Tsuchiura பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 22 வயதுடைய இலங்கை இளைஞர் விசக்ஷன உயிரிழந்த சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த இவர் கல்விக்காக ஜப்பான் சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட பின்னர் நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகவும், உடல்நிலை பாதிப்பு குறித்து பலமுறை தெரிவித்தும் உரிய கவனம் வழங்கப்படவில்லை என அவரது சகோதரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தனது சகோதரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செய்யப்பட்ட முறைப்பாட்டையும் ஜப்பானிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
உங்கள் கருத்து என்ன?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top