இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கை வரலாற்றில் அதிகூடிய வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்புதலைப் பெற முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் கிடைத்த 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 3.06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி தொடர்ந்தால், ஆண்டு இறுதிக்குள் மொத்த வெளிநாட்டு பண அனுப்புதல் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பதற்ற சூழலையும் தாண்டி சம்பள உயர்வு, புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், சர்வதேச அங்கீகாரம் மற்றும் தொழிலாளர் நலத்திட்ட விரிவாக்கம் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
