வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சர ஆலய தேர்த்திருவிழா கோலாகலம்..!

Author
0

இலங்கையின் பாடல் பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (29) பக்தி பூர்வமாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது.
மே 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து அருளாசி பெற்றனர்.
பஞ்சரத பவனியாக நடைபெற்ற இந்த தேர்த்திருவிழா, ஆன்மீக பக்தி, பாரம்பரியம் மற்றும் சமய மரபுகளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து திருவிழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
🕉 பக்தி வெள்ளத்தில் மிதந்த மன்னார் திருக்கேதீச்சரம்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top