கர்ப்பிணி கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு - வயிற்றிலிருந்த குழந்தையும் பலி
அனுராதபுரம் - விமான நிலைய வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஆர்.எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற கிராம உத்தியோகத்தர் ஆவார்.
கடந்த 18ஆம் திகதி, மற்றொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த சிறிய லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் சிறிய லொறியின் ஓட்டுநரான 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
