சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..! இலங்கைத் தமிழ் இளம்பெண் கொ*டூரமாக உயி*ரிழப்பு!

Author
0
சென்னையின் கோயம்பேடு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற பரபரப்பான சம்பவத்தில், இலங்கையைச் சேர்ந்த 18 வயதுடைய தமிழ் இளம்பெண் யான்சி உயிரிழந்துள்ளார்.
தகவல்களின்படி, கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் பெரும் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியேறிய இளம்பெண்ணை, மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவொன்று துரத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இடம்பெற்ற சம்பவத்தில் இளம்பெண் வாகனத்துடன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவருடன் பயணித்த மற்றொரு சிறுமி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோயம்பேடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
💔 இளம் உயிரின் துயரமான இழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top