இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த கிரீட் படேல் என்ற நபர், தனது மனைவியின் தொடர்ச்சியான துன்பு*றுத்தலால் தன்னை கருணைக் கொ*லை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற தனது மூன்றாவது திருமணத்திற்குப் பின்னர், மனைவி தொடர்ந்து பணம் மற்றும் நகைகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத் தகராறுகள் ஏற்படும் போதெல்லாம் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களை பயன்படுத்தி தமக்கு எதிராக புகார்கள் அளிப்பதாகவும், தனது முந்தைய திருமணத்தில் பிறந்த குழந்தையையும் துன்பு*றுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பலமுறை பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் உயிர் மாய்ப்பு போன்ற கடுமையான முடிவை எடுக்க நேரிடலாம் என எச்சரித்துள்ள அவர், கருணைக் கொ*லைக்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
