IPL 2026 FINAL | மகுடத்திற்கான மகா மோதல் இன்று!

Author
0
இரண்டு மாதங்களாக ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்திய IPL 2026 தொடரின் உச்சக்கட்டமான இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், முன்னாள் சாம்பியன் குஜராத் டைடன்ஸ் (GT) அணியும் கோப்பைக்காக நேருக்கு நேர் மோதுகின்றன.
🔥 பேட்டிங்கில் விராட் கோலி, ரஜத் படிதார் உள்ளிட்ட அதிரடி வீரர்களை கொண்டுள்ள RCB அணியும், ஷுப்மன் கில், சாய் சுதர்சன் தலைமையிலான வலுவான GT அணியும் சமபலத்துடன் களமிறங்குகின்றன.
⚡️ தகுதிச்சுற்று 1-ல் குஜராத்தை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி RCB இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தாலும், சொந்த மைதானமான அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் மிகவும் ஆபத்தான அணியாக பார்க்கப்படுகிறது.
🎯 ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி ஒரு புறம், விராட் கோலி - ரஜத் படிதார் அனுபவம் மறுபுறம் என, இந்த இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🏆 சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளுமா RCB?
அல்லது சொந்த மண்ணில் மீண்டும் மகுடம் சூடுமா GT?
பதில் இன்று இரவு!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top