வயது மூப்பு காரணமாக 85 வயதில் உயிரிழப்பு...
தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோகினி மணி தனது 85ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது மறைவு செய்தி வெளியானதைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் இரங்கல் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது தாயாரின் மறைவு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகினி மணியின் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
