மே 3: "சாத்தியமற்ற போர் அல்லது மோசமான ஒப்பந்தம்!"
"வாஷிங்டன் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது! - டிரம்ப் முன் இரண்டே தேர்வுகள் தான் உள்ளன என ஈரானியப் படை அதிரடி அறிவிப்பு!"
அமெரிக்கா தனக்கான முடிவுகளை எடுப்பதற்கான களம் இப்போது மிகவும் சுருங்கிவிட்டதாக IRGC திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அமெரிக்காவின் கடல் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விதித்த 'ஒரு மாதக் கெடு', மற்றும் வாஷிங்டனுக்கு எதிராக ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குரல்களில் ஏற்பட்டுள்ள 'மாற்றம்' ஆகியவையே அமெரிக்காவை இந்த நெருக்கடியான நிலைக்குத் தள்ளியுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நகர்வுகளைப் புரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது எனக்கூறிய IRGC, "'சாத்தியமற்ற ராணுவ நடவடிக்கை' அல்லது 'ஈரானுடனான மோசமான ஒப்பந்தம்' ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே டிரம்ப் தேர்வு செய்ய வேண்டும்" என 'X' (ட்விட்டர்) தளத்தில் பகிரங்கமாகப் பதிவிட்டுள்ளது.
ஈரானியப் படையின் இந்த அதிரடியான பதிவு, அந்நாட்டின் அனைத்து முன்னணி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
