தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்து ஜூன் 11ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பதிவில்,
"என்னைப் பற்றிய பல செய்திகள் வெளியாகி வருகின்றன. என் வாழ்க்கையின் முக்கியமான முடிவு குறித்து என் அம்மாவின் ஆசீர்வாதத்துடன் ஜூன் 11 காலை 9.30 மணிக்கு அறிவிப்பேன்" என தெரிவித்துள்ளார்.

தற்போது ‘பென்ஸ்’ திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள ராகவா லாரன்ஸ், படப்பிடிப்பு முடிந்த பின்னர் தனது அடுத்த கட்ட முடிவை அறிவிக்கவுள்ளார்.

அரசியலுக்கு வருகிறாரா?

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்குவாரா?

தவெகவில் இணைவாரா?

அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கத்துடன் கைகோர்ப்பாரா?

அல்லது ரஜினி ஆதரவு அரசியல் பாதையா?
என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

விஜய்யின் நெருங்கிய நண்பராகவும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகவும் அறியப்படும் ராகவா லாரன்ஸின் அடுத்த நகர்வு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.