இலங்கைத் தமிழ் இளம்பெண்ணின் தோழியும் சிகிச்சை பலனின்றி மரணம்
சென்னை கோயம்பேடு பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவத்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழ் இளம்பெண் யாசினியின் 17 வயது தோழியும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல்களின்படி, கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ம*துபான பா*ரில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, இரு இ*ளம்பெண்களும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களை துரத்தியதாகக் கூறப்படும் குழுவினர் பயணித்த கார், அவர்கள் சென்ற வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் 18 வயதுடைய யாசினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 17 வயது சி*றுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
