காணாமல் போன யுவதி கொ*லை செய்யப்பட்ட நிலையில் மீட்பு..!

Author
0
மண்ணில் புதைக்கப்பட்ட சடலம் – சந்தேகநபர் கைது
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய – ரங்கல பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 22 வயதுடைய யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
💔 உயிரிழந்தவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய வாசனா சந்தமாலி வீரசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் படி, யுவதி காணாமல் போனதாக முதலில் முறைப்பாடு செய்த நபர்மீதே பின்னர் சந்தேகம் எழுந்துள்ளது.
📌 சந்தேகநபரின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, யுவதி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
📌 நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், சுமார் மூன்று அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
📌 சம்பவத்திற்குப் பின்னர் தப்பியோடியிருந்த சந்தேகநபர், மீண்டும் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
📌 கைது செய்யப்பட்டபோது அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
⚖️ திருமணமான சந்தேகநபர், கடந்த நான்கு ஆண்டுகளாக உயிரிழந்த யுவதியுடன் வாழ்ந்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
🔍 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top