யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்!

Author
0

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று(31.05.2026) மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பொலிஸார் துரத்தி வந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்

இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.பின்னர் துரத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top