பல உயிர்களைக் காப்பாற்றி வரும் 1990 சுவசெரிய அறக்கட்டளை, தனது 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதலாவது இரத்த தான முகாமை அண்மையில் ஹோட்டன் பிளேஸில் அமைந்துள்ள அதன் பிரதான அலுவலகத்தில் நடத்தியது.
"உயிர்களைக் காப்பாற்றும் சேவையின் மூலம் மேலும் பல உயிர்களைப் பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தன்னார்வமாக இரத்த தானம் செய்தனர்.
இந்த நிகழ்வில், அறக்கட்டளையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிரோஷன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
