புறக்கோட்டை செட்டித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திலிருந்து, பம்பலப்பிட்டி ஸ்ரீ கதிரேசன் ஆலயம் வரை நேற்று (28) நடைபெற்ற 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர்த் திருவிழாவின் "வெள்ளி ரத" ஊர்வலத்தில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக கலந்து கொண்டு அருள் ஆசி பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சில்வா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க, பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் உள்ளிட்ட பல பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
அன்றைய தேர்ப்பவனி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, காலி வீதி, காலி முகத்திடல், சென்ட்ரல் வீதி, செத்தம் வீதி, யோர்க் வீதி, லெய்டன் பஸ்டியன் மாவத்தை, பிரதான வீதி, கடல் வீதி, கதிரேசன் வீதி, பிராஸ் ஃபவுண்டர் வீதி, ஆண்டிவேல் வீதி மற்றும் கெய்மன் வாயில் வழியாக பயணித்து, புறக்கோட்டை புதிய கதிரேசன் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
