தென்னாப்பிரிக்க கால்பந்துக்கு பேரிழப்பு – 25 வயதில் காலமானார் ஜேடன் எடம்ஸ்!

Author
0
தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கால்பந்து வீரரும், 2026 FIFA உலகக்கோப்பையில் தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய ஜேடன் எடம்ஸ் (25) காலமானார்.
உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், திடீரென உயிரிழந்துள்ளமை தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி உலக கால்பந்து ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேடன் எடம்ஸ், தென்னாப்பிரிக்க தேசிய அணிக்காக உலகக்கோப்பையில் முக்கிய பங்காற்றியதுடன், உள்ளூர் கழகமான மமேலோடி சண்டவுன்ஸ் (Mamelodi Sundowns) அணிக்காகவும் விளையாடி வந்தார்.
இதுவரை அவரது உயிரிழப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🕊️ இளம் வயதிலேயே பிரிந்த ஜேடன் எடம்ஸுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top