சட்டவிரோத துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

Author
0
சட்டவிரோதமாக 'ரிப்பீட்டர்' (Repeater Gun) ரகத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அம்பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர், நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top