இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCU) அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுமார் ரூ.90.8 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற 23 வயதுடைய மலேசிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் துபாயிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (18) வருகை தந்தபோது, அவரது உணவுப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கைன் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
