சற்றுமுன்னர் பிலியந்தலையில் துப்பாக்கிச்சூடு! – பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்!

Author
0
பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனத்தில் வந்திருந்த இரு நபர்களை விசாரிக்க முயன்றபோது, அவர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு சந்தேகநபர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மோட்டார் வாகனத்தில் வந்திருந்த மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top