வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு, திருவிழாவிற்கான ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆலயப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபை அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பக்தர்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் திருவிழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இதன்போது, நல்லூர் திருவிழா காலப்பகுதியில் சினிமா பாடல்கள், ஆடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஐந்து கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
