எஸ். ஜானகி மறைவு – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

Author
0
இந்திய திரையிசை உலகின் "இசைக்குயில்" என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார்.
அவரது மறைவைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில்,
"தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ். ஜானகி. பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இந்திய இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ். ஜானகியின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
🕊 இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற கலைஞருக்கு எமது அஞ்சலிகள். அவரது குரல் என்றும் காலத்தால் அழியாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top