இலங்கை தடகள வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ள நிலையில், கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்ற போட்டியில், 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம், கொமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்காக இலங்கை 20 ஆண்டுகளாகக் காத்திருந்த நீண்ட எதிர்பார்ப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டியில் சிந்தன விதானகே பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்றதன் பின்னர், இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

மேலும், கொமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் இலங்கை வென்ற 5ஆவது தங்கப் பதக்கமாகவும், சர்வதேச தடகள அரங்கில் நாட்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகவும் இது பதிவாகியுள்ளது.

ருமேஷ் தரங்கவுக்கு இலங்கையின் வாழ்த்துகள்!