22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரு மனுக்கள்!

Author
0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு இடைக்கால மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சிஹல உருமயவின் தலைவர் சரத் மனமேந்திர மற்றும் ஓய்வுபெற்றோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேரா ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த சட்டமூலம் சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு இடைக்கால மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சிஹல உருமயவின் தலைவர் சரத் மனமேந்திர மற்றும் ஓய்வுபெற்றோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேரா ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த சட்டமூலம் சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top